மவுண்ட் பார்க் பள்ளியில் 17ம் தேதி ஸ்காலர்ஷிப் தகுதி தேர்வு
தியாகதுருகம் : தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கையில் 100 சதவீதம் கல்வி கட்டண சலுகை பெறுவதற்கான ஸ்காலர்ஷிப் தகுதி தேர்வு வரும் 17 ம் தேதி நடக்கிறது.தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு தோறும் மாணவர்களின் தகுதி அடிப்படையில் பிளஸ் 1 சேர்க்கையில் 100 சதவீதம் கல்வி கட்டண சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டு கல்வி கட்டண சலுகை பெறுவதற்கான தகுதி தேர்வு வரும் 17 ம் தேதி காலை 10:30 மணிக்கு இப்பள்ளியில் நடக்கிறது.தேர்வு 2 மணி நேரம் நடைபெறும். பத்தாம் வகுப்பு பாடங்களான தமிழ் 20, ஆங்கிலம் 20, அறிவியல் 30, கணிதத்தில் 30 வினாக்கள் கேட்கப்படும். இதில், மாணவர்கள் பெறும் மதிப்பெண், 10ம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 சேர்க்கையில் கல்வி கட்டணம், விடுதி கட்டணம், 'நீட்' நுழைவுத்தேர்வு பயிற்சி கட்டணம் 25 பேருக்கு 100 சதவீதம் வழங்கப்படும். கல்விக் கட்டணத்தில் 100 சதவீத சலுகை 50 பேர், 50 சதவீத சலுகை 50 பேர், 25 சதவீத சலுகை 50 பேர் என மொத்தம் 175 பேருக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்பட உள்ளது. தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்காக விழுப்புரம், செஞ்சி, பண்ருட்டி, விருத்தாச்சலம், திருக்கோவிலுார், திருவெண்ணைநல்லுார், பெண்ணாடம், வடலுார், வேப்பூர், சங்கராபுரம், சின்னசேலம், மணலுார்பேட்டை, எறையூர், கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி ஆகிய வழித்தடங்களில் இருந்து மவுண்ட் பார்க் பள்ளி பஸ் இலவசமாக இயக்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 75388 86105 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.