உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலி ஆசிரியர் பணி ஆணை; சிதம்பரத்தில் பள்ளி ஊழியர் கைது

போலி ஆசிரியர் பணி ஆணை; சிதம்பரத்தில் பள்ளி ஊழியர் கைது

சிதம்பரம் : சிதம்பரத்தில், போலியாக ஆசிரியர் பணி ஆணை வழங்கி பண மோசடியில் ஈடுபட்ட, பள்ளி ஊழியரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் அருகே ஆயிப்பேட்டையை சேர்ந்தவர் நந்தகோபால் மகன் ராஜதுரை, 35; அண்ணாமலை நகரில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் ராணி சீதையாச்சி பள்ளியில் பதிவு எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவர், தான் பணியாற்றும் பள்ளியில் ஆசிரியர் பணி வாங்கி தருவதாக கூறி, குமராட்சியை சேர்ந்த ராஜராஜன்,34; ஆயிப்பேட்டை பாண்டித்துரை,27; ஆகியோரிடம், ரூ.6.83 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு, பள்ளியின் நிர்வாக தலைவர் மற்றும் செயலர் ஆகியோரின் கையெழுத்தை போட்டு, போலியாக ஆசிரியர் பணி ஆணையை தயாரித்து, கொடுத்தார்.இருவரும், பள்ளி தலைமை ஆசிரியை பேர்லின் வில்லியத்தை சந்தித்து, பணி ஆணையை வழங்கியபோது, அது போலி பணி ஆணை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து, தலைமை ஆசிரியர் பேர்லின் வில்லியம், கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் வழக்கு பதிந்து, ராஜதுரையை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ