உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி மாணவர் தேசிய கராத்தே போட்டிக்கு தகுதி

பள்ளி மாணவர் தேசிய கராத்தே போட்டிக்கு தகுதி

பண்ருட்டி: பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ஈரோட்டில் மாநில அளவிலான கராத்தே போட்டி சமீபத்தில் நடந்தது. இந்த போட்டியில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கடலுார் மாவட்டம், பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 மாணவர் ஆர்யா, 19 வயது பிரிவு போட்டியில் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்று, தேசிய அளவிலான கராத்தே போட்டியில் விளையாட தகுதி பெற்றர். அந்த மாணவரை பள்ளி தாளாளர் வீரதாஸ்,முதுநிலை முதல்வர் வாலண்டினா லெஸ்லி, இணை செயளாலர் நிட்டின் ஜோஷ்வா உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை