உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கண்டித்த ஆசிரியர்களை தாக்கிய பள்ளி மாணவர்கள்

கண்டித்த ஆசிரியர்களை தாக்கிய பள்ளி மாணவர்கள்

வேப்பூர்; வேப்பூர் அரசு பள்ளியில், பயிற்சி ஆசிரியர்கள் இருவரை மாணவர்கள் தாக்கினர். கடலுார் மாவட்டம், சிறுபாக்கம் அடுத்த பொயனப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 24; இவர், வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி ஆசிரியர். நேற்று காலை பள்ளியில் காலாண்டு தேர்வு நடந்தது. தேர்வு எழுதி முடித்த மாணவர்கள், மதியம் பள்ளி வளாகத்தில் மறுநாள் தேர்விற்கு படித்தனர். அவர்களை, பிளஸ் 2 மாணவர்கள் ஏழு பேர் கும்பல் தொந்தரவு செய்தது. இதை பயிற்சி ஆசிரியர் மணிகண்டன் கண்டித்தார். ஆத்திரமடைந்த மாணவர்கள், மாலை, 4:15 மணிக்கு, தேர்வு அறையில் இருந்த மணிகண்டனை தாக்கினர். தடுக்க வந்த மற்றொரு பயிற்சி ஆசிரியர் ஸ்ரீநிதி, 21, என்பவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த ஆசிரியர்கள் இருவரும், வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வேப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை