உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி மாணவி மாவட்ட அளவில் சாதனை

பள்ளி மாணவி மாவட்ட அளவில் சாதனை

ஸ்ரீமுஷ்ணம்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி மாவட்ட அளவில் நடந்த இலக்கிய மன்ற போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ஸ்ரீமுஷ்ணம் அ டுத்த ஸ்ரீ ஆதிவராக நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வரும் மாணவி ராகவி. இவர் கடலூரில் நடந்த மாவட்ட அளவிலான இலக்கிய மன்ற பேச்சுப்போட்டியில் பங்கேற்றார். இதில் அவர் 6 மற்றும் 7ம் வகுப்பு பிரிவில் முதலிடத்தில் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் பேச்சுப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை தலைமை ஆசிரியர் (பொறுப்பு)அருள்வடிவேலன், ஆசிரியர்கள் ஜெயக்குமார், அருள்மேரி, மார்க்ரெட், ராஜலட்சுமி, சக்திபிரியா மற்றும்பெற்றோர்கள் மாணவ மாணவியர் சால்வை அணிவித்து பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ