மேலும் செய்திகள்
நண்பரின் சகோதரி காரை திருடியவர் கைது
20-Sep-2024
காட்டுமன்னார்கோவில், : திருமணத்திற்கு மறுத்த காதலியை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடிவருகின்னர்.காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள கீழக்கடம்பூர், புதுத்தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மகள் கற்பகலட்சுமி (எ) அபிநயா, 21; தந்தை இறந்ததால், தாயுடன் வசித்து வருகிறார். காட்டுமன்னார்கோவில் அரசு கலைக்கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் படித்து வந்த நிலையில், இடையில் நின்று விட்டு தற்போது சென்னை தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.அபிநயாவை குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த மதியழகன் என்ற வாலிபர், காதலித்து வந்தார். இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் ஏற்பாடு நடந்தது. இதற்கிடையே மதியழகனின் நடத்தை சரியில்லை என தெரிந்ததால் அபிநயா திருமணத்திற்கு மறுத்துவிட்டார். .மேலும் மதியழகனுடன் போனில் பேசுவதையும் நிறுத்திவிட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன் அபிநயா சென்னையில் வேலை செய்யும் இடத்திற்கு சென்ற மதியழகன் அங்கு அபிநயாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.இதனால், அபிநயா சென்னையில் இருந்து புறப்பட்டு ஊருக்கு வந்துள்ளார். நேற்று காலை கீழகடம்பூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று தனியாக இருந்த அபிநயாவிடம் தகராறு செய்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மதியழகன், மறைத்து வைத்திருந்த அரிவாளால் அபிநயா கழுத்தில் வெட்டி விட்டு, தப்பி சென்றார்.அபிநயாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக அவரை புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு மதியழகனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20-Sep-2024