உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொள்முதல் நிலையங்களில் செயலர் ஆய்வு

கொள்முதல் நிலையங்களில் செயலர் ஆய்வு

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் முதன்மைச் செயலர் ஆய்வு மேற்கொண்டார். குறிஞ்சிப்பாடி அடுத்த குண்டியமல்லுார், ஐய்யந்துார் பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலர் சத்தியபிரதா சாகு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கொள்முதலின் போது விவசாயிகள் சமர்ப்பிக்கும் வருவாய்த்துறை ஆவணங்கள், நெல்லின் தரம் மற்றும், ஈரத்தன்மை குறித்தும், தகவல் பலகை, வி.ஏ.ஓ.,க்கள் மூலம் வழங்கப்படும் சான்றிதழ் அடிப்படையில் நெல் கொள்முதல் செய்வது ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. கொள்முதல் நிலையங்களில் அலுவலர்கள் தங்களுக்கு பணிகளை முறையாக செய்ய வேண்டும். விவசாயிகள் இடைத்தரகர்களிடம் செல்லாமல், நேரடியாக கொள்முதல் நிலையத்தை அணுக அறிவுறுத்தப்பட்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இயக்குநர் அண்ணாதுரை, கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ