உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விதை பரிசோதனை அலுவலர்  ஆய்வு 

விதை பரிசோதனை அலுவலர்  ஆய்வு 

கடலுார்: கடலுார் விதை பரிசோதனை நிலையத்தில் விதை பரிசோதனை அலுவலர் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் விதை பரிசோதனை அலுவலர் ராஜகிரி, கடலுார் விதை பரிசோதனை நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது, அனைத்து பதிவேடுகள், விதை முளைப்பு திறன் அறை, விதை மாதிரிகளில் இருந்து முளைப்பு திறன் கணக்கிடும் முறை ஆகியவற்றை ஆய்வு செய்தார். விதை பரிசோதனை நிலையத்திற்கு வரும் விதை மாதிரிகளை பகுப்பாய்வு செய்து தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது, கடந்த ஏப்., முதல், நேற்றை நிலவரப்படி 95 விதை மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டது. ஆய்வின் போது, வேளாண்மை அலுவலர்கள் விஜயா, தில்லைக்கரசி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை