உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநில கால்பந்து போட்டிக்கு நடுவீரப்பட்டு மாணவிகள் தேர்வு

மாநில கால்பந்து போட்டிக்கு நடுவீரப்பட்டு மாணவிகள் தேர்வு

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அடுத்த வி.காட்டுப்பாளையம் அரசு பள்ளி 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் கடலுார் குறுவட்ட கால்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றனர்.அதனை தொடர்ந்து கடந்த 25 ம் தேதி நெய்வேலியில் நடந்த மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் போட்டியிட்டு முதலிடம் பெற்றனர்.இந்த மாணவிகள் வரும் ஜனவரி மாதம் திருச்சியில் நடக்கும் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.மாநில அளவில் நடக்கும் கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் வடிவேல்,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் காசிலிங்கம், ஊராட்சித் தலைவர் சிவராமன் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !