செல்லியம்மன் கோவில் தேரோட்டம்
புவனகிரி: மருதுார் செல்லியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புவனகிரி அடுத்த மருதுார் செல்லியம்மன் கோவில் தேர்த் திருவிழா கடந்த 21ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சுவாமி க்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆண்டு முழுதும் நீர் நிறைந்த கிணற்றில் வைக்கப்பட்ட அம்மன் சிலை நேற்று முன்தினம் வெளியில் எடுத்து வீதியுலா நடத்தினர். நேற்று சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் பகல் 12:00 மணிக்கு தேரில் எழுந்தருளச் செய்தனர். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.