காமராஜர் கல்வி குழுமத்தின் மாணவர்களுக்கான கருத்தரங்கம்
சிதம்பரம் : சிதம்பரத்தில், காமராஜர் கல்வி குழுமம் சார்பில் 'மாறிவரும் உலகமும் - இந்தியாவும்' அதில் தமிழர்களுக்கான சவால்களும் வாய்ப்புகளும்' என்ற தலைப்பில் மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது.நிகழ்ச்சிக்கு பெஸ்ட் அண்டு கிராம்டன் நிறுவன ஆலோசகர் விசாகன் தலைமை தாங்கி பேசினார். கத்தார், தோகா வங்கியின், முன்னாள் தலைவர் சீதாராமன்,சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். தமிழக காங்., முன்னாள் மாநில தலைவர் அழகிரி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் காமராஜர் கல்வி குழு முதல்வர்கள் கீதா, சுகந்திராதேவி, விமலன், தொழிலதிபர் சித்தார்த்தன், காங்., மாவட்ட தலைவர் செந்தில்நாதன், நகர்மன்ற கவுன்சிலர் தில்லை மக்கின், தெய்வீக பக்தர் பேரவை ஜெமினி ராதா, டாக்டர் செந்தில்வேலன், சேரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.