மூத்தோர் தடகள விளையாட்டு சங்க மாதாந்திர கூட்டம்
கடலுார்: கடலுார் மாவட்ட மூத்தோர் தடகள விளையாட்டு சங்கத்தின் மாதாந்திர கூட்டம், கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் திருமலை தலைமை தாங்கினார். செயலாளர் சுபாஷ்பாபு சிறப்புரையாற்றினார். வரும் டிசம்பர் 6 மற்றும் 7ம் தேதிகளில் திருவண்ணாமலையில் தென் மாநிலங்களுக்கு இடையில் நடக்க உள்ள தடகள போட்டிகளில் கலந்து கொள்பவர்களின் விபரங்கள் கோரப்பட்டது. புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப் பட்டனர். தர்மலிங்கம், நடராஜன், கருணாகரன், ராசமோகன், தமிழ்ச்செல்வன், குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் திருஞானம் நன்றி கூறினார்.