உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சி.என்.பாளையம் சாலையில் கழிவுநீர் ஓடுவதால் சீர்கேடு

சி.என்.பாளையம் சாலையில் கழிவுநீர் ஓடுவதால் சீர்கேடு

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் சாலையில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் சொக்கநாதன்பேட்டை தெருவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. இந்த கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, இப்பகுதியில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் தடையின்றி கால்வாய் வழியாக ஓட நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ