உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சேதமடைந்த மேன்ேஹால் சாலையில் ஓடும் கழிவுநீர்

சேதமடைந்த மேன்ேஹால் சாலையில் ஓடும் கழிவுநீர்

கடலுார் : கடலுாரில் பாதாள சாக்கடை மேன் ேஹால் சேதமடைந்து கழிவுநீர் வெளியேறுவதால் வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சின்ன வாணியர் தெருவில் ஏராளமான வணிக நிறுவனங்கள், கடைகள் செயல்பட்டு வருகிறது. இப்பகுதிக்கு தினந்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், இச்சாலையில் உள்ள பாதாள சாக்கடை மேன் ேஹால் சேதமடைந்துள்ளது. இதிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுவதால் வியாபாரிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே, சேதமடைந்த பாதாள சாக்கடை மேன் ேஹாலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி