உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டி சக்தி ஐ.டி.ஐ., மாணவருக்கு முதலிடம்

மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டி சக்தி ஐ.டி.ஐ., மாணவருக்கு முதலிடம்

நடுவீரப்பட்டு: பண்ருட்டி சக்தி ஐ.டி.ஐ. மாணவர் ஈட்டி எறிதல் போட்டியில் மாநில அளவில் நடந்த போட்டியில் முதலிடம் பெற்றார்.மாநில அளவிலான தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் கடலூரில் நடந்தது. இதில் மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் பண்ருட்டி சக்தி ஐ.டி.ஐ. மாணவர் தணிகைச் செல்வன் கலந்து கொண்டு முதல் இடம் பிடித்தார்.மேலும் இந்த ஆண்டு நடந்த விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சக்தி ஐ.டி.ஐ. நிறுவனம் சார்பில் பாராட்டு விழா ஐ.டி.ஐ., வளாகத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு சக்தி ஐ.டி.ஐ. தாளாளரும், பண்ருட்டி எஸ்.வி. ஜுவல்லர்ஸ் அதிபருமான அருள் தலைமை தாங்கி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் கல்விக்குழு தலைவர் சிவராமன், பொருளாளர் சம்பந்தர்,சாரதா வித்யாலயா பள்ளியின் தாளாளர் நடராஜன் மற்றும் இயக்குனர்கள் ரஜினிகாந்த்,ரவிச்சந்திரன்,கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை