உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிட்கோ தொழிற்பேட்டை : முதல்வர் திறந்து வைப்பு

சிட்கோ தொழிற்பேட்டை : முதல்வர் திறந்து வைப்பு

பண்ருட்டி : காடாம்புலியூர் சிட்கோ தொழிற்பேட்டையில் சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோருக்கான தொழிற்பேட்டையை காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் ரூ. 7.48 கோடி மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை வளாகத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். காடாம்புலியூரில் நடந்த நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ராஜசேகர், சிட்கோ மேலாளர் செல்வகுமார், உதவி பொறியாளர் பிரம்மதீசன், கடலுார் சிட்கோ கண்காணிப்பாளர் செந்தில்செல்வம், முன்னாள் ஒன்றிய சேர்மன் பாலமுருகன், தாசில்தார் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ