உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வித்யா மந்திர் பள்ளியில் கையெழுத்து போட்டி

வித்யா மந்திர் பள்ளியில் கையெழுத்து போட்டி

விருத்தாசலம்: தேசிய கையெழுத்து தினத்தை முன்னிட்டு, விருத்தாசலம் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கையெழுத்து போட்டி நடந்தது. இதில், பள்ளித் தாளாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கி, கையெழுத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பள்ளி முதல்வர் சிவகாமி வரவேற்றார். தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியைகள் பாரதி, வள்ளிக்கண்ணு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த போட்டியில், 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.இறுதியில், ஆசிரியை மரியா ஆரோக்கிய ராணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி