மேலும் செய்திகள்
மாநில சிலம்பம் போட்டி
19-Aug-2025
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லை ஊராட்சி நடுலைப்பள்ளியில் மண்டல அளவில் சிலம்பம் போட்டியில் வென்ற மாண வர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. புவனகிரியில் மண்டல அளவில் நடந்த சிலம்பம் போட்டில் வாழைக்கொல்லை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்கள் சதீஷ்குமார் 60 கிலோ எடை பிரிவில், 50 கிலோ எடை பிரிவில் பாலாஜி. மாணவர் விஷ்வா ஆகியோர் சிலம்பம் போட்டியில் தங்க பதக்கம் வென்றனர்14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஏழாம் வகுப்பு மாணவன் கவிவேந்தன் தொடு சிலம்பத்தில் வெண்கல பதக்கம் வென்றார். இவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் கருணாகரன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் வெண்ணிலா, முன்னாள் ஊராட்சித் தலைவர் பன்னீர்செல்வம் முன்னி லை வகித்தனர். பதக்கம் வென்ற மாணவர்களை ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.
19-Aug-2025