உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வெள்ளி நகைகள் பறிமுதல்

 வெள்ளி நகைகள் பறிமுதல்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட, வெள்ளி நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். காட்டுமன்னார்கோவில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி பாபு தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தாமோதரன், ரகுநாதன் உள்ளிட்ட போலீசார் நேற்று மதியம் 1:30 மணியளவில் லால்பேட்டை, கைக்காட்டி அருகே வாகன சோதனை செய்தனர். அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தபோது, ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட வெள்ளி மோதிரங்கள், 57 மற்றும், 13 டாலர்கள் இருந்ததை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் பொள் ளாச்சி, கும்பம்பாளையத்தை சேர்ந்த கணேசன் மகன் தீனதயாளன், 36; என்பவர் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள நகை கடைகளுக்கு புதிய மாடல் மோதிரங்கள் ஆர்டர் பெறுவதற்காக கொண்டு வந்ததாக தெரிவித்தார். தொடர்ந்து, 2 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி நகைகளை காட்டுமன்னார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பறக்கும்படை அதிகாரி பாபு, சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் தாமோதரன், ரகுநாதன் ஆகியோர் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை கொடுத்து வெள்ளி நகைகளை பெற்று செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை