சிங்காரவேலர் பிறந்த நாள்
கடலுார்: கடலுாரில் சுதந்திர போராட்ட வீரர் சிங்காரவேலர் பிறந்த நாள் விழா நடந்தது. சிறு விசைப் படகு உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவில், சங்கத்தின் ஆலோசகர் சிவராஜ் தலைமை தாங்கி, சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்தார். ஓய்வு பெற்ற மாவட்ட விளையாட்டு அதிகாரி திருமுகம், திருநாவுக்கரசு, அன்பு உள்ளிட்ட பலர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.