உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சர்வீஸ் ரோடு அமைக்க இடம் அளவீடு பணி

சர்வீஸ் ரோடு அமைக்க இடம் அளவீடு பணி

புவனகிரி: மேல்புவனகிரி ஒன்றியம், கீழமூங்கிலடியில் இருந்து கிள்ளை சாலை வரை புறவழிச்சாலையில் சர்வீஸ் ரோடு அமைக்க இடம் அளவீடு பணி நடந்தது. விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையிலான நான்கு வழிச்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இதில், கீரப்பாளையம் ஒன்றியம், வயலுார் சாலையில் இருந்து மேல்புவனகிரி ஒன்றியம், கீழமூங்கிலடி பாசிமுத்தான் ஓடை வரையிலான சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. விபத்தை தடுக்கும் வகையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கீழமூங்கிலடியில் இருபுறமும் தலா ஒன்னரை கி.மீ., துாரத்திற்கு சர்வீஸ் ரோடு அமைக்க இடம் அளவீடு பணி நடந்து வருகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் முட்புதர்கள் அகற்றப்பட்டு சமன்படுத்தும் பணிகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி