சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம்
நெல்லிக்குப்பம்: மேல்பட்டாம்பாக்கம் சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் பழமையான ஞானபார்வதி உடனுறை சிவலோகநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சரபேஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது சிறப்பாகும். இக்கோவில் கும்பாபி ேஷக விழா கடந்த 2ம் தேதி கணபதி ஹோமம், முதல்கால யாக சாலை பூஜைகளுடன் துவங்கியது. 3ம் தேதி இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாக சாலை பூஜைகள், பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. 8:00 மணிக்கு கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து 9:40 மணிக்கு ராஜ கோபுரம், விமானங்கள் கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.மாலை திருக்கல்யாணம், இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. சேனாபதி, வாகீசன் குருக்கள் பூஜைகள் செய்தனர்.