உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கே.என்.பேட்டை முட்புதரில் எலும்புக்கூடு

கே.என்.பேட்டை முட்புதரில் எலும்புக்கூடு

கடலுார் : கடலுார் அடுத்த கே.என்.பேட்டை சாலையோர முட்புதரில் மனித எலும்பு கூடு கிடந்ததை, அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.திருப்பாதிரிபுலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மனித எலும்புக் கூட்டை கைப்பற்றி, இறந்தவர், யார் என விசாரணை செய்தனர். மேலும் காணாமல் போனவர்கள் குறித்தும் விசாரணை செய்தனர். அதில் கடலுார் அடுத்த எம்.புதுாரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 60; என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது தெரியவந்து விசாரித்தனர். அப்போது, கே.என்.பேட்டை முட்புதரில் எலும்பு கூடாக மீட்கப்பட்டவர் கிருஷ்ணமூர்த்தி என்பது உறுதி செய்யப்பட்டது.இது குறித்து திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை