திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்
நெய்வேலி: நெய்வேலியில் மக்கள் சேவை இயக்கத்தின் சார்பில் 28ம் ஆண்டு மாணவ,மாணவிகளுக்கான திறன் காண் மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. நெய்வேலியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். என்.எல்.சி., முதன்மை பொது மேலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். என்.எல்.சி., நிதித்துறை துணை பொது மேலாளர் சுமுகா மற்றும் என்.எல்.சி., பட்டதாரி பொறியாளர் சங்கத்தின் பொது செயலாளர் சிவ பிரசாத் முன்னிலை வகித்தனர். மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் காரணமாக இருப்பவர்கள் பெற்றோரா? கல்வி நிலையங்களா? சமூகம் மற்றும் ஊடகங்களா? சுய சிந்தனையும் ஒழுக்கமுமா? எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. பள்ளி மாணவர்கள் பங்குபெற்ற விவாத கருத்தரங்கத்தை பி.எஸ்.ஜி., அமைப்பின் பயிற்சியாளர் தாமரைச்செல்வன் நடத்தினார். அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டன. கருத்தரங்கில் பங்குகொண்ட சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளும், மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளும் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டன.