உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குப்பைகளை தரம் பிரித்து தாருங்கள்: கிள்ளை செயல் அலுவலர் வேண்டுகோள்

குப்பைகளை தரம் பிரித்து தாருங்கள்: கிள்ளை செயல் அலுவலர் வேண்டுகோள்

கிள்ளை: கிள்ளை பேரூராட்சி பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து வழங்குமாறு செயல் அலுவலர் மலர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு: கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளிலச சேரும் குப்பைகளை ஈரக்கழிவு, உலர் கழிவு, சானிட்டரி கழிவு, சிறப்பு கவனக் கழிவு என 4 வகைகளாக தரம் பிரித்து வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் பொதுமக்கள் குப்பைகளை 4 வகைகளாக தரம் பிரித்து மட்டுமே வழங்க வேண்டும். இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை