உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்னாள் மாணவர்கள் சார்பில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு

முன்னாள் மாணவர்கள் சார்பில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., முன்னாள் மாணவர்கள் சார்பில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நடந்தது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., கட்டுமானத்துறை மற்றும் கட்டிடவியல் துறையில் 1979 - 1984 ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.7.55 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை மாணவர்கள் பயன்பாட்டிற்கு அற்பணிப்பு விழா நடந்தது. விழாற்கு பல்கலை முன்னாள் மாணவர் மைய இயக்குநர் கணபதி தலைமை தாங்கினார். கட்டிடவியல் துறை தலைவர் மணிக்குமாரி வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் குமார், ராகவன், முருகானந்தம், ஹிலால் அஹமது, மாறன் பேசினர். முன்னாள் துறை தலைவர் கனகசபை வாழ்த்துரை வழங்கினார். செந்தில்நாதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஸ்மார்ட் பகுப்பறைக்கு 65 ஆயிரம் செலவில், ஒலி அமைப்புகளை, 1984-1988 ல் பயின்ற பொறியல் புல மாணவர்கள் வழங்கினர். பேராசிரியர்கள் செந்தில்குமார், சிவப்பிரகாசம் நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை