மேலும் செய்திகள்
அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது
12-Oct-2026
விருத்தாசலம்: அனுமதியின்றி பட்டாசு விற்றவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ஜங்ஷன் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, பஸ் ஸ்டேண்ட் அருகே தள்ளுவண்டியில் அனுமதியின்றி பட்டாசு விற்ற நாச்சியார்பேட்டையை சேர்ந்த ராஜா,56, என்பவரை கைது செய்தனர். மேலும், அவர் வைத்திருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
12-Oct-2026