சோமநாதசுவாமி கோவில் திருப்பணி ஆலோசனை
பண்ருட்டி: பண்ருட்டி சோமநாதசுவாமி கோவில் திருப்பணி தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது.பண்ருட்டியில் 750 ஆண்டுகால பழமைவாய்ந்த சோமநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு, மனவாசங்கடந்த முனிவர் ஜீவசமாதி உள்ளது. இக்கோவிலில் கடந்த ஜூலை 3 ம் தேதி பாலாலயம் நடந்து. பாலாலயம் முடிந்த நிலையில் கோவிலில் விநாயகர், சுப்ரமணியர் சுவாமி கோவில்களின் பீடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.இந்நிலையில் திருப்பணி விரைவுபடுத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயல்அலுவலர் பாஸ்கர், தாலுகா சம்மேளன தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட தொழில்வர்த்தக சங்க செயலாளர் வீரப்பன், தி.மு.க. அவைத் தலைவர் ராஜா, கவுன்சிலர்கள் சோழன், சண்முகவள்ளிபழனி, கதிர்காமன் முன்னிலை வகித்தனர்.இதில் முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, ரோட்டரி சங்க தலைவர் பாலமுருகன், நகை வியாபாரிகள் சங்க தலைவர் தியாகு, இந்துமக்கள் கட்சி தேவா, பா.ஜ., செல்வகுமார், ஆர்.எஸ்.எஸ்., நாராயணன், கோவில் குருக்கள் கார்த்திகேயன், சீனுவாசன்,கல்யாணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் திருப்பணிகள் விரைந்து நடத்துவது. திருப்பணி குழுவில் மேலும் சிலரை சேர்ப்பது. முக்கிய பணிகளில் கலந்தாய்வு செய்து செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.