மேலும் செய்திகள்
மருத்துவர்கள் தின விழா
03-Jul-2025
கடலுார், : கடலுார் கிருஷ்ணா மருத்துவமனை குழுமத்தின் சேவையை பாராட்டி, நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.கடலுார் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர் தின விழா நடந்தது. சங்கத் தலைவர் முகுந்தன் வரவேற்றார். துணைத் தலைவர் கண்ணன், மருத்துவர்கள் தினம் குறித்து பேசினார். சங்க செயலாளர் வினோத் வாழ்த்திப் பேசினார். இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் (தேர்வு) டாக்டர் ஸ்ரீதர், கிருஷ்ணா மருத்துவமனை குழும இயக்குனர் மறைந்த டாக்டர்கிருஷ்ணமூர்த்தியின் சேவையை பாராட்டி, அவரது மகன் நிர்வாக இயக்குனர் டாக்டர்ஸ்ரீகிருஷ்ணாவிடம் நினைவு பரிசு வழங்கினார். டாக்டர்கள் ராஜசேகர், முருகன், சத்தியமூர்த்தி ஆகியோருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.டாக்டர் கிருஷ்ணகிஷோர், நினைவு பரிசு பெற்ற டாக்டர்களின் சாதனைகளை தொகுத்து பேசினார். பெண் டாக்டர்கள் பங்கேற்ற வினாடி வினா போட்டி நடந்தது.விழாவில், டாக்டர்கள் ஸ்டான்லி சந்திரன், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, சந்திரலாதன் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
03-Jul-2025