உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சோதனைச் சாவடியில் எஸ்.பி., ஆய்வு

 சோதனைச் சாவடியில் எஸ்.பி., ஆய்வு

கடலுார்: கடலுார் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் போலீசாரின் பாதுகாப்பு பணிகள் குறித்து எஸ்.பி., ஜெயக்குமார் ஆய்வு செய்தார். புதுச்சேரி மதுபாட்டில்கள் கடலுார் மாவட்டத்திற்கு கடத்தி வருவதை தடுக்கும் பொருட்டு ஆல்பேட்டை மற்றும் கொமந்தான்மேடு உள்ளிட்ட இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, போலீசார் சரியாக பணிபுரிகிறார்களா என்றும், போதிய மின்விளக்கு வசதி, கண்காணிப்பு கேமராக் கள் சரியாக இயங்குகிறதா என்பது குறித்தும் எஸ்.பி., ஜெயக்குமார் ஆய்வு செய்தார். தொடர்ந்து, கண்காணிப்பு பணியை சிறப்பாக செய்ய வேண்டுமென, போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். டி.எஸ்.பி., தமிழ் இனியன், புதுநகர் இன்ஸ்பெக்டர் சந்துரு உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை