உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேளாண் மாணவியர் சிறப்பு முகாம்

வேளாண் மாணவியர் சிறப்பு முகாம்

புவனகிரி : புவனகிரி அருகே கீழமூங்கிலடியில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு மாணவியர் கிராமத்தில் தங்கி விவசாயிகளளுடன் சிறப்பு முகாம் துவங்கியது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு மாணவியர், கிராமங்களில் தங்கி விவசாயிகளுடன் நேரடி பயிற்சி பெறும் முகாம் பல்வேறு பகுதியில் துவங்கியது. இதில் ஒரு பகுதியாக புவனகிரி ஒன்றியம், கீழ மூங்கிலடி அம்பலத்தடிகுப்பத்தில் ஜி.11., குழு, பேராசிரியர் துரைராஜ் மேற்பார்வையில் நேற்று முன்தினம் துவங்கியது. ஊராட்சி தலைவர் சுடர்விழி அன்பரசன் தலைமை தாங்கினார். குழு தலைவி ஜஸ்மிதா வரவேற்றார். கிராம நிர்வாக அலுவலர் சிவகுருநாதன் முன்னிலை வகித்தார். முகாமில் விவசாயிகளுகச்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.குழு துணைத் தலைவி ஜனனி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !