உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறப்பு வைப்பு நிதி முகாம்

சிறப்பு வைப்பு நிதி முகாம்

புவனகிரி, : மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புவனகிரி கிளையில் சிறப்பு வைப்பு நிதி திரட்டும் முகாம் அக்., 31ம் தேதி வரை நடக்கிறது. கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புவனகிரி கிளையில், சிறப்பு வைப்பு நிதி திரட்டும் சிறப்பு முகாம் கடந்த 16ம் தேதி துவங்கியது. வங்கியின் கிளை மேலாளர் முருகன் முகாமை துவக்கி வைத்தார். இதில் 365 நாட்களுக்கு விழா கால சிறப்பு வட்டி விகிதமாக தனி நபர் வைப்புகளுக்கு 7.75 சதவீதமும், ஒரு கோடி ரூபாய்க்கு மேலான வைப்புகளுக்கு 8.15 சதவீதமும், மூத்த குடிமக்கள் வைப்பு நிதிகளுக்கு 8.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் சிறப்பு வைப்புகளுக்கு அதிக வட்டிவு வழங்குவதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்த முகாம், அக்., 31ம் தேதி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை