என்.எஸ்.,மகாவீர் ஜூவல்லரியில் பண்டிகைக்கால சிறப்பு விற்பனை
கடலுார: கடலுார் லாரன்ஸ் ரோட்டில் உள்ள என்.எஸ்.மகாவீர் ஜூவல்லரியில் பண்டிகைக்கால சிறப்பு விற்பனையையொட்டி புத்தம் புது டிசைனில் ஏராளமான நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என கடை உரிமையாளர்கள் சுசில்குமார், சும்திகுமார் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது, கடலுார் லாரன்ஸ் ரோட்டில் உள்ள என்.எஸ்.மகாவீர் ஜூவல்லரி மக்களின் நன்மதிப்பை பெற்ற ஐந்து தலைமுறை கண்ட பாரம்பரியமான ஸ்தாபனம். எங்களிடம் புத்தம் புது டிசைன்களில், லட்சுமி கடாட்சம் பொருந்திய நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தரமான தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் நகைகள் கிடைக்கிறது. எங்களிடம் நகைகள் வாங்கினால் ஐஸ்வர்யம் பெருகும் என்பதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் எங்கள் கடையில் நகைகள் வாங்குவதை விரும்புகின்றனர். அரசு உத்தரவுப்படி HUID ஆறு இலக்க முத்திரையுடன் அனைத்து நகைகளும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது நவராத்திரி, தீபாவளி பண்டிகைக்கால சிறப்பு விற்பனை நடந்து வருகிறது. அனைவரும் வருகை தந்து பிடித்த நகைகளை தேர்வு செய்து வாங்கிச்செல்லலாம் என தெரிவித்தனர்.