உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உலக நன்மை வேண்டி சிறப்பு ஹோமம்

உலக நன்மை வேண்டி சிறப்பு ஹோமம்

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் செல்வ விநாயகர், திரவுபதியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு ஹோமம் நடந்தது.செல்வ விநாயகர் ஆலய வழிபடுவோர் அறக்கட்டளை சார்பில் நடந்த சிறப்பு ஹோமத்தில் கணபதி மற்றும் சக்தி சுவாமிகளுக்கு அஸ்திர பூஜை, உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. மாலை ஐப்பசி பவுர்ணமியையொட்டி அபிஷேக ஆராதனையும் நடந்தது. பூஜைகளை நாகராஜ் மற்றும் பிரகதீஷ் குருக்கள்செய்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி