உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் கோவில்களில் புத்தாண்டு சிறப்பு பூஜை

கடலுார் கோவில்களில் புத்தாண்டு சிறப்பு பூஜை

கடலுார்; ஆங்கில புத்தாண்டான நேற்று கடலுார் பகுதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 3:௦௦ மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது. காலை 5:00 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று, கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பாடலீஸ்வரர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பாடலீஸ்வரர் மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பளித்தனர்.கடலுார் மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள் கோவிலில் பெருமாள் மற்றும் தாயாருக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில், புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதி கோவில்களில் மகா தீபாராதனை நடந்தது. செம்மண்டலம் சாந்த ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணம்

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் புத்தாண்டையொட்டி அதி காலையில் மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து அம்புஜவல்லிதாயார் உற்சவமூர்த்தி யக்ஞவராகன், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

திட்டக்குடி

திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. காலை மூலவர் தீர்த்தபுரீஸ்வரர், தாயார் திரிபுரசுந்தரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. முத்தங்கி கவசத்தில் அம்பாள் அருள்பாலித்தார். திட்டக்குடி வைத்தியநாத சுவாமி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில், இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர், பெண்ணாடம் பரிமள ரங்கநாதர், வீற்றிருந்த பெருமாள் ஆகிய கோவில்களில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி