விசாரணை அதிகாரிகளாக மாறும் தனிப்பிரிவு போலீசார்
பு வனகிரி மற்றும் மருதுார் போலீஸ் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறையாக உள்ளதால் தனிப்பிரிவு போலீசார் விசாரணை அதிகாரியாக இருப்பதால் பலரும் மன உளச்சல் அடைகின்றனர். சிதம்பரம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட புவனகிரி மற்றும் மருதூரில் போலீஸ் நிலையங்கள் உள்ளன. இங்கே போலீசார் பற்றாக்குறையால் சொர்ப்ப அளவில் பணியில் உள்ள போலீசார் பணி சுமையால் அவதி யடைகின்றனர். இந்த சூழ்நிலையில் குற்ற சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாவட்ட காவல் எஸ்.பி.,க்கு முன் கூட்டியே தகவல் சொல்லக்கூடிய தனிப்பிரிவு போலீசார் இரண்டு நிலையங்களிலும் தனித்தனியாக பணியில் உள்ளனர். சர்கிள் இன்ஸ்பெக்டர் போலீஸ் நிலையமாக இருப்பதால் தனிப்பிரிவு போலீசார் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதுடன், இவர்கள் போலிஸ் நிலையத்தில் அமர்ந்து கொண்டு அங்கு வரும் புகார் மனுக்களை பெற்று விசாரிப்பதும் மற்ற போலீசார்களை, தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அச்சுறுத்துன்கின்றனர். இதனால் சில போலீசார் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். விசாரணை செய்ய வேண்டிய அதிகாரிகள் இவர்களுடைய அடாவடியால் செய்வதறியாமல் தவிக்கின்றனர். மேலும் இரு நிலையங்களில் பணியாற்றும் தனிப்பிரிவினர் கூட்டாக சேர்ந்து வலம் வருகின்றனர். இரு போலீஸ் நிலையங்களில் எல்லை பகுதியில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் பத்திரங்கள் தொலைத்து விட்டதாக வழக்குப் பதிந்துள்ளனர். முறைப்படி எஸ்.பி., விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் சிலர் புலம்பி வருகின்றனர்.