உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி ஆய்வு

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி ஆய்வு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, பாண்டியன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். தமிழகத்தில், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதையொட்டி, சிதம்பரம் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நடந்து வருகிறது. கொத்தட்டை மற்றும் அரியகோஷ்டி ஊராட்சிகளில் நேற்று நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை, பாண்டியன் எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, விவரங்களை கேட்டறிந்தார். அவருடன், முன்னாள் அ மைச்சர் ஜெயபால், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், ஒன்றிய பொருளாளர் பாஸ்கர், நிர்வாகிகள் சிவராஜ், புஷ்பராஜ், கோவிந்தராஜ், சேகர், பூங்கொடி, ஐய்யப்பன் உள்ளிட்டவர்கள், உடனி ருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை