ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்
புவனகிரி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நடந்த பயிற்சி யில், கலெக்டர் ஆய்வு செய்தார். புவனகிரி தாலுகா அலுவலகத்தில், வாக்காளர்பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. இதில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: மாவட்டத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், சிறப்பு தீவிர திருத்தத்தின் முதல் நிலையாக கடந்த, அக்., 28ம் தேதி துவங்கி, நாளை வரை, ஓட்டுச்சாவடி நிலை அலு வலர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல் கணக்கெடுப்பு படிவம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் ஓட் டுச்சாவடி நிலை அலுவலர்களால் வீடு, வீடாகசென்று வினியோகிக்கப்படும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தபணிகள் நாளை மறுநாள் துவங்குகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் விவரங்களை சரி பார்த்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.