விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
மந்தாரக்குப்பம்: கருங்குழியில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.கருங்குழி கிராமத்தில் ஓட்டபந்தயம், கயிறு இழுத்தல், பாட்டுபோட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வடலுார் டி.ஆர்,எம்., சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் ராஜமாரியப்பன் பரிசு வழங்கி பாராட்டினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.