உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காட்டுமன்னார்கோவில் கல்லுாரியில் விளையாட்டு போட்டி துவக்கம்

காட்டுமன்னார்கோவில் கல்லுாரியில் விளையாட்டு போட்டி துவக்கம்

காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவில் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு போட்டி துவக்க விழா நடந்தது.குமராட்சி கீழவன்னியூர் கிராமத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்த ஆண்டிற்கான விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் துவங்கியது. கல்லூரி வளாகத்தில் நடந்த போட்டியை முதல்வர் மீனா கொடியசைத்து துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் சரவணன் வரவேற்றார். 100மீட்டர், 200, 400, 800, 1,500 மீட்டர் ஒட்டம், நீளம் தாண்டுதல் தொடர் ஓட்டம், குண்டு எறிதல் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.நிகழ்ச்சியில் துறைத்தலைவர்கள் சிற்றரசு, பூபாலன், செந்தில்குமார், தேவநாதன், உதவி பேராசிரியர் ஜோதி, கவுரவ விரிவுரையாளர் வர்மன், தேசிய கபடி விளையாட்டு வீரர் கோபு, அலுவலக கண்காணிப்பாளர் ரம்யா, அறிவழகன், பாலாஜி, தர்மராஜ், வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். நேற்று குழு போட்டிகளான கபடி, வாலிபால், இறகு பந்து, கால்பந்து உட்பட போட்டிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை