உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் ஸ்ரீமதுராஸ் ஸ்வீட்ஸ் கடை திறப்பு விழா

கடலுாரில் ஸ்ரீமதுராஸ் ஸ்வீட்ஸ் கடை திறப்பு விழா

கடலுார், : கடலுார், திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயர் செட்டித் தெருவில் ஸ்ரீமதுராஸ் ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி கடை திறப்பு விழா நடந்தது.அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, திறந்து வைத்தார். உரியைாளர்கள் சித்ராலயா ரவிச்சந்திரன், கவுஷிக்நாதன் வரவேற்றனர். லீமா அய்யப்பன், டாக்டர் பிரவீன் அய்யப்பன், முத்துலட்சுமி, விஜயலட்சுமி குத்துவிளக்கேற்றினர்.சுரேந்திரா மருத்துவமனை சேர்மன் டாக்டர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.விழாவில், வள்ளி விலாஸ் கணேசன், அழகப்பா நகை மாளிகை மணி, ஆனந்தா ஜூவல்லரி ராஜி, மூர்த்தி, முன்னாள் ஊராட்சி தலைவர் சரவணன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், தொழிலதிபர் சக்திவேல், சன் பிரைட் பிரகாஷ், வியாபாரிகள், தொழிலதிபர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.ஸ்வீட்ஸ் மற்றும் கார வகைகள் முன்னணி நிறுவனங்களின் உணவுப் பொருட்களால் தயார் செய்யப்பட்டு சுவையாகவும், தரமாகவும், குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது என, உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி