உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஸ்ரீநாராயணி நிதி நிறுவன புதிய கிளை கடலுாரில் திறப்பு

ஸ்ரீநாராயணி நிதி நிறுவன புதிய கிளை கடலுாரில் திறப்பு

கடலுார்: கடலுார் செம்மண்டலத்தில் ஸ்ரீநாராயணி நிதி நிறுவன 76வது கிளை திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு கடலுார் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர், கடலுார் மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் தலைமை தாங்கி, ஸ்ரீநாராயணி நிதி நிறுவன புதிய கிளையை திறந்துவைத்து, குத்து விளக்கேற்றினார். நிதி நிறுவன இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, துணை பொதுமேலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கிளை மேலாளர் புருஷோத்தமன் வரவேற்றார். விழாவில் தி.மு.க., நிர்வாகிகள் விஜயகுமார், முருகன், அஷ்ரப் அலி, மணிவண்ணன், மணிகண்டன், பாலச்சந்தர், வினோத்குமார், விஜி, வினோத், சிலம்பரசன், செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !