மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
27-Jan-2026
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் செயின்ட் பால் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளிமாணவர்அகில இந்திய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்றார். சென்னை நேரு ஸ்டே டியத்தில் தேசிய அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் 25வது தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி 4 வயது முதல் 16 வயதினருக்கு நடந்தது. இப்போட்டியில் பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் செயின்ட் பால் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் தருண், பரணிதரன் இருவர் பங்கேற்றனர். 100 மீட்டர் போட்டியில் மாணவர் பரணிதரன் இந்திய அளவில் 3ம் இடம் பிடித்து வெண்கலம் பரிசு வென்றார். இதன் மூலம் சர்வதேச அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற பரணிதரனை, பள்ளி தாளாளர் கிருபாகரன், பள்ளி முதல்வர் நேகபாட்டியா, தலைமை ஆசிரியை மரியலிசானா, பயிற்சி ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.
27-Jan-2026