உங்களுடன் ஸ்டாலின் முகாம் விண்ணப்பம் வினியோகம்
மந்தாரக்குப்பம் : கெங்கைகொண்டான் பேரூராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின் ' திட்ட முகாம் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் பணி நடந்து வருகிறது. தமிழக அரசு சார்பில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகிறது. கெங்கைகொண்டான் பேரூராட்சியில் வரும் 30ம் தேதி 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் வேலன் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதனை முன்னிட்டு கெங்கைகொண்டான் பேரூராட்சி மக்களுக்கு தேவையான விண்ணப்பங்கள் வழங்கும் பணியை சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். செயல் அலுவலர் மகேஸ்வரி, இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி ஊழியர்கள் உமர்பாரூக், ராஜகோபால் உள்ளிட்டோர் உடனிருந்த னர்.