உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவக்கி வைப்பு

கடலுாரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவக்கி வைப்பு

கடலுார்: கடலுார் முதுநகர் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. விழாவிற்கு கடலுார் அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைக்காக அதிகாரிகளிடம் பரிந்துரைத்தார். முகாமில் பல்வேறு அரசுத்துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். மாநகராட்சி கவுன்சிலர்கள் பாரூக்அலி, கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேம்குமார், சரத், ஆதி பெருமாள், முன்னாள் கவுன்சிலர் கோமதி செந்தில், இப்ராகிம், கலைவாணி, இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ்பவித் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ