உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ரூ. 91.77 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கல்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ரூ. 91.77 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கல்

கடலுார்: திட்டக்குடி அடுத்த கோவிலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகித்தார். அமைச்சர் கணேசன், முகாமை துவக்கி வைத்து, 430 பயனாளிகளுக்கு 91.77 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின், அவர் பேசியதாவது: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் கடலுார் மாவட்டத்தில் நகர பகுதிகளில் 130 முகாம்கள், ஊரகப் பகுதிகளில் 248 முகாம்கள் என மொத்தம் 378 சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதுவரை கடலுார் மாவட்டத்தில் 222 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 79,356 மனுக்கள் பெறப்பட்டு 20,725 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக 54,685 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. முகாம்களில் பெறப்படும் மனுக்களை முறையாக பதிவேற்றம் செய்து, சம்மந்தப்பட்ட துறையினரால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதுபோன்ற முகாம்களில் கூலி தொழிலாளிகள், பொதுமக்கள் பங்கேற்று, காப்பீடு அட்டை, மகளிர் உரிமைத் தொகை, ரேஷன் அட்டை உள்ளிட்ட பல்வேறு மனுக்களை அளித்து பயன் பெறலாம்' என்றார். நிகழ்ச்சியில் துணை கலெக்டர் (முத்திரைத்தாள்) தனலட்சுமி, ஆர்.டி.ஓ., விஷ்ணுப்பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை