உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த பெரியகண்டியங்குப்பத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. நகராட்சி கமிஷனர் பானுமதி தலைமை தாங்கினார். தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தார். நகரமைப்பு அலுவலர் செல்வம் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் முகாமை துவக்கி வைத்தார். இதில், நகராட்சி கவுன்சிலர்கள் ராஜ்குமார், குமாரி முருகன், தி.மு.க., - காங்., கட்சி நிர்வாகிகள், நகராட்சி ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில், 13 துறைகளை சேர்ந்த 43 சேவைகளுக்கு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை