மேலும் செய்திகள்
2 துணை பி.டி.ஓ., மாற்றம்
05-Jul-2025
புதுச்சத்திரம்; புதுச்சத்திரத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். தாசில்தார் அன்பழகன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதா வரவேற்றார். முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் முத்துபெருமாள் முகாமை துவக்கி வைத்து, மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ், பொதுமக்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கினார். வில்லியநல்லுார், கொத்தட்டை ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், வட்டார ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். வட்டார மருத்துவ அலுவலர் அமுதா பெருமாள் நன்றி கூறினார்.
05-Jul-2025