மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் முகாம்..
03-Sep-2025
புவனகிரி : மேல்புவனகிரி ஒன்றியம், நத்தமேடு சமுதாயக் கூடத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது. ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் அன்பழகன் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) பாலாமணி, வருவாய் ஆய்வாளர் முருகன் முன்னிலை வகித்தனர். தாசில்தார் அன்பழகன் முகாமை துவக்கி வைத்தா ர். 15 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் 46 சேவைகள் தொடர்பான மனுக்களை பெற்றனர். முகாமில் 20க்கும் மேற்பட்ட பயனாளிகள் பட்டா திருத்தம் கேட்டு மனு அளித்த நிலையில், உடனடி பட்டா வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தி.மு.க., நிர்வாகிகள் ஜெகதீசன், மாறன், மேகநாதன், பாலமுருகன், ரவி குமரவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர்கள் பழனி இளங்கோவன், மாலா, சரண்யா செய்திருந்தனர். ஊராட்சி செயலாளர் புதுராஜன் நன்றி கூறினார்.
03-Sep-2025