உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

சிதம்பரம்; சிதம்பரம் நகராட்சி உட்பட்ட 17, 18 ஆகிய வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் தெற்கு வீதியில் நடந்தது. நகராட்சி சேர்மன் செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார். நகராட்சி கமிஷனர் மல்லிகா முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் மணிகண்டன், வளர்மதி, அப்பு சந்திரசேகரன், நகர துணை செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், இளங்கோவன், இளைஞர் அணி அமைப்பாளர் அருள், தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மகளிர் உரிமை தொகை வேண்டி விண்ணப்பம் அளித்தனர். 15க்கும் மேற்பட்ட துறை அதிகாரிகள் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ